×

வெளிமாநில ஊழியர்கள் தமிழில் பேச பயிற்சி

சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ் இணையக் கல்விக்கழகம், தமிழ்மொழி மற்றும் பண்பாட்டுப் பரப்புரை திட்டத்தின் ஒரு பகுதியாக, பேச்சுத் தமிழ் வகுப்புகளை வழங்கி வருகிறது. வெளி மாநில ஊழியர்களுக்காக இந்தி வழிப் பேச்சுத் தமிழ் பாடத்திட்டம் வகுக்கப்பட்டு, அப்பாடங்கள் 14 காணொலிகளாக உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது இத்திட்டம், மக்கட்தொகை கணக்கெடுப்பு இயக்குநரகத்தில் பணிபுரியும் வெளி மாநில ஊழியர்களுக்கு வழங்கப் படவுள்ளது. முதல் குழுவுக்கான வகுப்பு ராஜாஜி பவனில் உள்ள தமிழ்நாடு மக்கட்தொகை கணக்கெடுப்பு இயக்குநரகத்தில் நேற்று நடைபெற்றது. இயக்குநர் சஜ்ஜன்சிங் ஆர் சவான், தமிழ் இணையக் கல்விக்கழக உதவி இயக்குநர் மதுரா தொடங்கி வைத்து உரையாற்றினர். விவரங்களுக்கு tva@tn.gov.in, tpktva@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம்.

The post வெளிமாநில ஊழியர்கள் தமிழில் பேச பயிற்சி appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Government of Tamil Nadu ,Tamil Internet Education Corporation ,
× RELATED அங்கீகரிக்கப்படாத CNG/LPG மாற்றங்கள்...